தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்பன் பாதிப்புகளைப் பார்வையிட செல்லும் பிரதமர் மோடி! - மேற்கு வங்கச் செய்திகள்

டெல்லி: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

pm-modi-to-undertake-aerial-surveys
pm-modi-to-undertake-aerial-surveys

By

Published : May 22, 2020, 10:11 AM IST

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ”ஆம்பன் புயலின் பாதிப்புகள் குறித்து அறிந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்குச் செல்கிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட உள்ளார்.

காலை மேற்கு வங்க பகுதிகளைப் பார்வையிடும் பிரதமர், மதியம் ஒடிசா செல்கிறார். அதன்பின், அவர் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்” என்

ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேற்கு வங்கஅ மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. அதேபோல ஒடிசாவில் பல கடலோர மாவட்டங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மொத்த நாடும் மேற்கு வங்கத்திற்கு துணைநிற்கும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details