தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ஜன் அந்தோலன்’ கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் மோடி! - ஜன் அந்தோலன்

நாட்டில் வரவிருக்கும் திருவிழாக்கள், குளிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் ’ஜன் அந்தோலன்’ எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.08) தொடங்கி வைக்கிறார்.

மோடி
மோடி

By

Published : Oct 8, 2020, 9:53 AM IST

Updated : Oct 8, 2020, 10:51 AM IST

கரோனா பரவலுக்கு மத்தியில், நாட்டில் வரவிருக்கும் பண்டிகைகள், விரைவில் தொடங்கவுள்ள குளிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 'ஜன் அந்தோலன்' எனும் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்ககிறார். இந்தப் பிரச்சாரத்தை மோடி ட்விட்டரில் தொடங்கி வைப்பார் எனத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”முகக்கவசம் அணியுங்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுங்கள், கைகளை சுகாதாரமாகப் பேணுங்கள்” என்ற முக்கிய விழிப்புணர்வு செய்தியை மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும், குறைந்த விலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதுமே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா குறித்து உறுதிமொழி ஒன்று இப்பிரச்சாரத்தில் பங்கேற்கும் அனைவராலும் ஏற்கப்படும் என்றும், ஒருங்கிணைந்த செயல் திட்டமாக நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கரோனா பாதிப்புகள் கொண்ட மாவட்டங்கள், பகுதிகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வது, அனைத்து குடிமக்களையும் எளிமையாகச் சென்றடையும் வகையிலான செய்தியைக் கொண்டிருப்பது, அனைத்து ஊடகத் தளங்களையும் பயன்படுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முன்களப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு, அரசு திட்டங்களின் பயனாளிகளை மையப்படுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

மேலும், அரசாங்க வளாகங்களில் சுவர் ஓவியங்கள், எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே பலகைகள், மொபைல் வேன்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 8, 2020, 10:51 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details