மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி பேசிவருகிறார். ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் தனது 67ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். கடந்த நிகழ்ச்சியில், பெரிய சோதனைகளில் இருந்து இந்தியா மீண்டு வந்துள்ளதை வரலாறு நமக்கு காட்டுவதாக தெரிவித்திருந்தார்.