தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அட்டை -மோடி - காந்திநகர்

காந்திநகர்: வெடிகுண்டைவிடவும் வலிமையானது வாக்காளர் அட்டை என வாக்களித்தபின் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Narendra modi

By

Published : Apr 23, 2019, 9:54 AM IST

ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடந்துவருகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்கை வரிசையில் நின்று ஆர்வமாக செலுத்திவருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். எனது சொந்த ஊரான குஜராத்தில் வாக்களித்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது. கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதுபோல, வாக்களிப்பதன் மூலம் அதனை உணரலாம். பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டாக இருப்பதுபோல ஜனநாயகத்தின் ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வாக்காளர் அடையாள அட்டை வலிமையானது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details