மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், "சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதில் மக்களவை பெருமைப்படுகிறது. ஓம் பிர்லா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம் பிர்லாவை புகழ்ந்து பேசிய மோடி - மோடி
டெல்லி: சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதில் மக்களவை பெருமைப்படுகிறது என மோடி பேசியுள்ளார்.
modi
எனக்கு மிக நீண்ட நாட்களாகவே ஓம் பிர்லாவை தெரியும். அவரின் தொகுதியான கோடா கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. ஒரு மினி இந்தியாவை கோடா தொகுதி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பொது வாழ்க்கையில் பல காலமாக உள்ள அவர் மாணவ தலைவர் ஆனதில் இருந்து சமூகத்திற்கு சேவை செய்து வருகிறார்" என்றார். காங்கிரஸ், திமுக, திருணாமுல் உட்பட பல கட்சிகள் சபாநாயகராக ஓம் பிர்லாவை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.