இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். அங்கு பிரதமர் மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல்சாத், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கான சுமுகமான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு கொள்முதல், விமானப் போக்குவரத்து, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டு முயற்சி குறித்த மாநாட்டில் உரையாற்றிய மோடி, அங்கு இந்தியாவில் தொழில் செய்ய சவுதி நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.