டெல்லி: சிவசேனா நிறுவனர் பாலசாகேப் தாக்கரேவின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர், “ பால் தாக்கரே, தன்னுடைய கொள்கையில் உறுதியாக நின்றவர். மக்களின் நலனுக்காக அயராது உழைத்தார். அவர் பிறந்த இந்நன்நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தவர் பாலசாகேப் தாக்கரே. இவர் ஆரம்ப காலங்களில், “ப்ரீ பிரஸ் ஜர்னல்” என்ற தினசரி நாளிதழில் கருத்து சித்திரம் (கார்ட்டூனிஸ்ட்) வரைந்துவந்தார். 1960ஆம் ஆண்டு அந்தப் பணியை துறந்து, ஜூன் 19ஆம் தேதி 1960ஆம் ஆண்டு சிவசேனா கட்சியை தொடங்கினார்.