சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 811 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! - கொரோனா வைரஸ் எதிரொலி
டெல்லி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனா மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சீனாவிற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் இந்தியா உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி எழுதிய கடிதத்தில், "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனா மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். சீனா தனது சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா உதவி செய்யும். கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஹூபே மாகாணத்தில் மாட்டிக் கொண்ட இந்திய மக்களுக்கு மாற்று இடம் அளித்து உதவி செய்த சீன அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பருத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சீனா முழுமையான தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனா உயிரிழப்பு 811ஆக உயர்வு!