லடாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே, கடந்த ஜுன் 15ஆம் தேதி, இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் லே பகுதிக்குச் சென்று ராணுவ வீரர்களின் மத்தியில் உரையாற்றினார்.
சர்வதேச பிரச்னைகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு எடுத்துரைத்த பிரதமர்
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி விவரித்தார்.
அப்போது, பகவத் கீதையின் வசனத்தை மேற்கோள் காட்டி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் பேசினார். அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 5 ) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த பிரதமர் மோடி, தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை உறுதிசெய்துள்ளது.