மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திரமோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி இன்று 58ஆவது முறையாக அவர் உரையாற்றினார்.
’நமது பண்டிகைகளை பிரபலப்படுத்துங்கள்’ - மன் கி பாத் உரையில் மோடி - Festival Tourism
டெல்லி: மக்கள் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடவேண்டும என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்போது, தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்த நாளில் காதி பவன் போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மக்கள் வாங்கும்படி அறிவுறுத்திய அவர், தீபாவளி பண்டிகை இந்தியா கடந்து உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களால் கொண்டாப்படும் பண்டிகை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நமது பண்டிகைகளான ஹோலி, தீபாவளி, ஓணம், பொங்கல் போன்ற பண்டிகைகளை பிரபலப்படுத்த மற்ற மாநிலம் மற்றும் நாடுகளில் வசிக்கும் மக்களையும் விருந்தினர்களாகக் கலந்துக்கொள்ள அழைப்புவிடுங்கள் என்றும் மோடி கூறினார்.