சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வருவதோடு மட்டுமில்லாமல், பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
'மகிஷாசுரனான மோடியை மேற்கு வங்க துர்கை வீழ்த்துவார்' - Will Defeat Him
அமராவதி: மகிஷாசுரனான பிரதமர் மோடியை மேற்கு வங்க துர்கையான மம்தா வீழ்த்துவார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை கடுமையாக சாடினர். இதற்கு பாஜக தரப்பில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால்தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்துக் கடவுளான துர்கையம்மன் ஆணவத்தில் திரிந்த மகிஷாசுரனை வதம் செய்துகொன்றார். அதேபோல் மகிஷாசுரனான மோடியை மேற்கு வங்க துர்கையான மம்தா வீழ்த்துவார்" என தெரிவித்தார்.