பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி (21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை) 7 நாள் அரசு முறைப்பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார். இந்த பயணத்தின் போது, ஹவுஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் 'ஹவுடி மோடி' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். இதில், அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
7 நாள் அரசு முறைப்பயணம் - அமெரிக்கா புறப்பட்ட மோடி! - ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உறையாற்றுவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்
டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உறையாற்றுவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
Modi
பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74ஆவது கூட்டத்தில் உறையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பயங்கரவாதம் குறித்து அங்கு உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.