டெல்லி:ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (டிச.26) காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
இதன் பின்பு பேசிய அவர், "இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைப் பெற முடியும்.
உலகளாவிய மருத்துவ காப்பீட்டை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெறுவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. இதன் மூலம் 21 லட்சம் மக்கள் பயனடைவர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி