கோவிட்-19யை எதிர்கொள்ள மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வியெழுப்பி உள்ளார்.
மேலும் அவர், “நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. அதைத் எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.
பிரதமர் மோடி மவுனமான இருக்கிறார். பெருந்தொற்றுக்கு எதிராக போராடாமல், அதனிடம் சரணடைந்துவிட்டார்” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
நாட்டில் கரோனா வைரஸூக்கு நான்கு லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழப்பு 407 ஆக உள்ளது.
முன்னதாக, கிழக்கு லடாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், “பிரதமர் மோடி பேசுங்கள். நீங்கள் பேச பயப்பட வேண்டாம். சீனா நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆகவே, நாங்கள் அவர்களுக்கு எதிராக செயல்பட போகிறோம் என்று சொல்ல பயப்பட வேண்டாம். முழு நாடும் உங்களுடன் உள்ளது” என்று காணொலி வாயிலான செய்தியில் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: சிறையில் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி