ஐக்கிய நாடுகள் பொது சபையின் 75ஆவது கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாட்டின் தலைவர் கடந்த சில நாட்களாக உரையாற்றிவருகின்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.30 மணியளவில் உரையாற்றவுள்ளார்.
கோவிட்-19 பரவல் காரணமாக இந்தாண்டுக் கூட்டம் காணொலி மூலம் நடைபெறுவதால், பிரதமர் மோடியின் பதிவு செய்யப்பட்ட உரை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொது சபையின் வளாகத்தில் ஒளிபரப்பப்படும்.
இந்த உரையில், சர்வேதச உறவுகள், பயங்கரவாதத்திற்கு எதிரான உலக நாடுகளின் ஒற்றுமை, கோவிட்-19 பாதிப்பு எதிர்கொள்வதில் ஒருங்கிணைப்பு, பெண்கள் முன்னேற்றம், பருவ நிலை மாற்றம் ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பில்லை