உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கான தேர்தல், ஏழாவது கட்டமாக, மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் தற்போது, பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
'அணு ஆயுத சோதனை நடத்த துணிச்சல் வேண்டும்'- மோடி - உத்திரபிரதேசம்
உத்தரப்பிரதேசம்: நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு துணிச்சல் வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்தால் மட்டுமே அணு ஆயுத சோதனையை நடத்த துணிச்சல் வரும். இதை 21 ஆண்டுகளுக்கு முன்னரே வாஜ்பாய் அரசு வெற்றிகரமாக செய்து காட்டியது. மேலும், அணு ஆயுத சோதனை மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குகிறேன்.
குஜராத் மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்திருக்கிறேன். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்து வருடங்கள் அங்கம் வகித்திருக்கிறேன். தற்போது என்னுடைய வங்கிக் கணக்கை எடுத்துப் பாருங்கள், என் குடும்பத்திற்கென்று நான் எதையும் சேமிக்கவில்லை" என தெரிவித்தார்.