தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தான் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்! - Rajasthan Road Accident

டெல்லி: ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

Modi
Modi

By

Published : Mar 14, 2020, 6:10 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் இன்று காலை சரக்கு லாரி-ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி அருகிலிருந்த கிராம மக்கள் 11 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details