தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுத்திகரிப்பு நிலையத்திற்கு லட்சம் கோடி ரூபாய் முதலீடு - பிரதமர் நரேந்திர மோடி - மோடி லட்சம் கோடி ரூபாய் முதலீடு

ரியாத்: சுத்திகரிப்பு நிலையம், குழாய்கள் ஆகியவை 2024ஆம் ஆண்டுக்குள் அமைப்பதற்காக லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் நடந்த எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

Modi

By

Published : Oct 29, 2019, 10:57 PM IST

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். நாட்டின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் மூன்றாவது அமர்வில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், "இந்த மன்றத்தின் நோக்கம் பொருளாதாரம் குறித்து உரையாடுவது மட்டுமல்ல; உலகின் போக்கு, நலன் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. சவுதி அரேபியாவுடனான எங்கள் உறவு நூற்றாண்டு காலம் பழமையானது. இதுவே இரு நாட்டு உறவுக்கு அடித்தளம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதை உலக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் 400 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். இங்கு முதலீடு செய்யவரும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தினால் மனிதவளம் கிடைக்கும். சுத்திகரிப்பு நிலையம், குழாய்கள், எரிவாயு முனையம் ஆகியவை 2024ஆம் ஆண்டுக்குள் அமைப்பதற்கு லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வறைக்கு அருகே பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details