திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெலிபோனில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நாட்டில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வருகிற 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்குமாறு அப்போது அழைப்பு விடுத்துள்ளார்.