தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துள்ளது’ - பிரதமர் மோடி - தற்சார்பு இந்தியா

கொல்கத்தா: நாட்டிற்காக தற்பொழுது தைரியமான முடிவுகளையும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய முதலீடுகளையும் செய்யும் நேரம் வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

pm-modi-addresses-icc-know-the-key-takeaways
pm-modi-addresses-icc-know-the-key-takeaways

By

Published : Jun 11, 2020, 2:39 PM IST

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் 95ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, நாட்டிற்காக தற்போது தைரியமான முடிவுகளையும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய முதலீடுகளையும் செய்யும் நேரம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டார். அதில்

  • சணல் சாகுபடியில் கூடுதல் கவனம்
  • நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பெருக்குதல்
  • சூரிய சக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்
  • அத்தியாவசிய பொருள்களுக்கான உள்நாட்டு சங்கிலியை மேம்படுத்துதல்
  • நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையை வலுப்படுத்துதல்
  • இளைஞர்களை விவசாயத்திற்கு ஈடுபடுத்த ஊக்குவித்தல்
  • உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்க ஊக்குவித்தல்
  • நாட்டின் உற்பத்தி பொருள்களுக்கு அந்நிய நாடுகளில் வரவேற்பை அதிகரித்தல் ஆகியவற்றைத் தெரிவித்தார்.

இந்தக் கரோனா பேரிடர் காலத்தினை தற்சார்பு இந்தியாவிற்கான நல்வாய்ப்பாக மாற்ற அனைவரும் செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details