சில தினங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் என 'கரோனில்' மருந்தை அறிமுகம் செய்திருந்தார். ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கரோனில் மருந்தை உபயோகிக்கத் தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் - டெல்லி நீதிமன்றத்தை நாடிய வழக்கறிஞர்!
டெல்லி: கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்த பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாபா ராம்தேவுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷார் ஆனந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'பதஞ்சலி நிறுவனத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தை மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அவர்கள் கரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்ததாக ஊடகங்களில் பொய்யான கூற்றைத் தெரிவித்துள்ளனர். லாபத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, பொய்யான மருந்தை ஊடகங்களின் மூலமாக பரப்பி மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளனர். குறிப்பிட்ட அலுவலர்களிடம் ஒருபோதும் அனுமதி வாங்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானது இன்று(ஜூலை 3) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பாபா ராம்தேவ், கரோனாவை எதிர்கொள்ளும் பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகளான சுவாசரி, கரோனில் தொகுப்புக்குத் தடையில்லை எனவும், அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.