இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள தெற்கு பாங்காங் ஏரி அருகே, சீன ராணுவ வீரர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பிடித்த இந்த ராணுவத்தினர் தங்கள் காவலில் வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் ராணுவத்தினர், இந்தத் தகவலை சீன ராணுவத்திடமும் தெரிவித்துள்ளனர்.
எல்லைக்குள் தவறாக நுழைந்த சீன ராணுவ வீரர் - எல்லைக்குள் தவறாக நுழைந்த சீன ராணுவ வீரர்
இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவ வீரர் தவறுதலாக நுழைந்த நிலையில், அவரை இந்திய ராணுவத்தினர் காவலில் வைத்துள்ளனர்.
சீன ராணுவ வீரர்
உரிய நடைமுறைகளுக்குப் பின் விரைவில் பிடிபட்ட வீரர் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து எல்லையில் பதற்றநிலை ஏற்பட இரு நாடுகளும் படைகளைக் குவித்துவைத்துள்ளன.
இதையும் படிங்க:காதலித்த இரு பெண்களை ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்!