மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் ‘வந்தே பாரத்’ என்கிற அதிவேக விரைவு ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15-ம் தேதி முதல் இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில், ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் மின்னல் வேகத்தில் கடந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு, “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் வந்தே பாரத்” என குறிப்பிட்டிருந்தார்.