தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை விவகாரம்: மோடிக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!

திருவனந்தபுரம்: விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

pinarayi-vijayan-moves-resolution-in-assembly-urging-centre-to-reconsider-decision-to-lease-trivandrum-airport
pinarayi-vijayan-moves-resolution-in-assembly-urging-centre-to-reconsider-decision-to-lease-trivandrum-airport

By

Published : Aug 24, 2020, 1:14 PM IST

இந்திய விமான நிலைய ஆணையம் ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களையும் பொதுத்துறை - தனியார் கூட்டுக்குழு (பி.பி.பி.) என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில், அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகம், பராமரிப்பு ஆகியவற்றை அதானி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் மேற்பார்வை மற்றும் செயல்பாடுகளை பொதுத்துறை - தனியார் கூட்டுக் குழுவிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.

முன்னதாக, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் மேற்பார்வை மற்றும் செயல்பாடுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ''காணொலி அழைப்பின் மூலம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு குரலைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சியின் குரல்களும் ஒரே பார்வையைக் கொண்டிருந்தது. திருவனந்தபுரம் விமான நிலையம் கேரள மாநிலத்தின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்று. அதனால் விமான நிலையத்தின் செயல்பாடுகளும், நிர்வாகமும் மாநில அரசின் கைகளிலேயே இருக்க வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு பாஜகவைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்!

ABOUT THE AUTHOR

...view details