சமீபத்தில் பாலக்காடு மாவட்டம், நெம்மாராவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நடிகர் மோகன்லாலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது மோகன்லால் ரசிகர்கள் கூச்சலிட்டு இடையூறு செய்தனர்.
பினராயி விஜயனுக்கு தொல்லை கொடுத்த மோகன்லால் ரசிகர்கள் - nemmara
திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது மோகன்லால் ரசிகர்கள் தொல்லை கொடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பினராயி விஜயன், நாம் நாட்டை பற்றி சிந்திக்கும்போது சிலர் அதிலிருந்து விலகியிருப்பார்கள். நடிகர் மோகன்லால் கேரளாவின் பெருமை என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், ரசிகர்களுக்கு நடிகர்களைப் புகழ்வதிலேயே கவனம் இருக்கும். அதைத்தாண்டி அவர்களால் வர முடியாது, அது அவர்களின் வயதுக் கோளாறு. அதனால் அவர்கள் கூச்சலிடுவதை நிறுத்தமாட்டார்கள் என சிரித்தபடியே நக்கலாக பேசினார்.
அதன்பிறகும் மோகன்லால் ரசிகர்கள் கூச்சலிடுவதை நிறுத்தவில்லை. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பேசிய மோகன்லால் இதுபற்றி பேச விரும்பாமல் தவிர்த்துவிட்டார். பினராயி விஜயன் - மோகன்லால் இடையே நீண்டகாலமாக நல்ல புரிதல் உள்ளது. ரசிகர்கள் செய்யும் தவறால் அது மாறிவிடாது என்றாலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை மோகன்லால் கண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.