கரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அவ்வப்போது கைகளை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் எனவும், முகக் கவசங்கள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், முகக் கவசங்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்ற புரிதல் இன்றி பலரும் முகக் கவசங்களை சாலைகளில் வீசிச் செல்வதாகவும், இதன்காரணமாக தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகளவு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் பயணிப்போர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும், நோய்வாய்ப்படாத மக்களும் பாதிக்கப்பட அதிகளவு வாய்ப்புள்ளது.