வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா, கோவா தனியார் பத்திரிகையின் தலைமையாசிரியர் சவியோ ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்தப் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967இன் கீழ் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
2008இல் சீனாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்: சோனியா, ராகுலை விசாரிக்க மனு! - புரிந்துணர்வு ஒப்பந்தம்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சியின்போது சீனாவுடன் 2008இல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடாததற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்தி ராகுல் காந்தி
சீனாவுடன் விரோத உறவு இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சீனாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் உண்மைகளையும், ஒப்பந்தத்தின் விவரங்களையும் மறைத்துவிட்டது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.