தேசிய தலைநகர் பகுதியில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், அங்கு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டெல்லியிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பிற்கு எதிராகப் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சர்தக் சதுர்வேதி என்ற வழக்குரைஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.