தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக பொறுப்பாளரைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: அடுத்தது புதுச்சேரியா? - Puducherry MLA

புதுச்சேரி: பாஜக பொறுப்பாளரை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சந்தித்தது அக்கட்சியினரிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பொறுப்பாளரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: அடுத்தது புதுச்சேரியா?
பாஜக பொறுப்பாளரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: அடுத்தது புதுச்சேரியா?

By

Published : Dec 9, 2020, 9:15 AM IST

புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் குரானா நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய 72 மணி நேர போராட்டத்தை முடித்துவைப்பதற்காக நிர்மல்குமார் குரானா நேற்றைய முன்தினம் (டிச. 07) புதுச்சேரி வந்தார்.

அவரை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் ‌உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார் திடீரென நிர்மல் குமார் குரானாவை சந்தித்துப் பொன்னாடை போர்த்தி மலர்கொத்து வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்று ஜான் குமார் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...மரபு சிலம்பக்கலையை மலைகிராம குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details