கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க புதுச்சேரி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை எட்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி கரோனா நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள், பொதுமக்கள் நிதியுதவி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி உயர்த்தப்படுவதாக கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. உயர்த்தப்பட்ட விலையின்படி பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 பைசா உயர்த்தப்பட்டு 69.39 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 55 பைசா உயர்த்தப்பட்டு 65. 16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: ஏப்ரல் 14க்குப் பிறகும் நிறுத்திவைக்கப்படும் ரயில் சேவை
?