மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, மாநில அரசின் கல்வி உரிமை பறிப்பு, 3 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை 8 செமஸ்டர் தேர்வுகள் என சமூக நீதிக்கு எதிரான பல அம்சங்கள் இதில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் இத்திட்டத்தால், மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டுமெனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ஐயும் திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.