தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட அரசு நூற்பாலை ஊழியர்கள்! - அரசு நூற்பாலை ஊழியர்கள்

புதுச்சேரி : அரசு நடத்தும் நூற்பாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி தொழில் துறை அமைச்சர் வீடு முற்றுகையிடப்பட்டது.

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள்

By

Published : Oct 26, 2019, 4:11 PM IST

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஸ்பின்கோ நூற்பாலையில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், இரண்டு ஆண்டாக ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட ஊழியர்கள்

இது குறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்பாலை ஊழியர்கள் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தொழில் துறை அமைச்சர் கந்தசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க :நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details