இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “கரோனா தொற்று உலகம் முழுவதும் இன்னும் சில காலம் இருக்கும். இந்த நோயால் முதியவர்கள் தான் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி பொதுமக்கள் கரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொற்றாக உள்ளது. இது இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும். இந்த நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதற்கு தங்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மக்கள் தங்களுடைய வாழ்நாளை நகர்த்த முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார். மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். இதை தவிர நிதி ஆதாரங்களை தருவதாக அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தது புதிய திட்டம் இல்லை. மாநில அரசுக்கு நிதி சுமை ஏற்பட்டுள்ளது.