கரோனா வைரஸ் முழு அடைப்புக்கிடையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர்.
முன்னதாக வியாழக்கிழமை முழு அடைப்புக்கிடையில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக மீறியதால், புவனேஸ்வரில் காய்கறி சந்தையாக மாற்றப்பட்ட ஒரு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
சமூக விலகல் மட்டுமே உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் தொற்றுநோயான கரோனா வைரஸ் தாக்காமல் தவிர்க்கக்கூடிய மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று.
இந்தியாவில் 2 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.