பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு சில தலைவர்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியும் ஒருவர். முக்கியமாக இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இவர் தொடர்ந்து நான்காவது முறையாக ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
'இஸ்லாமியர்கள், தலித்துகள் தாக்கப்படுவதற்கு சங் பரிவார அமைப்புகளே காரணம்' - அசாதுதீன் ஒவைசி - தலித்துகள்
ஹைதராபாத்: "இந்தியாவில் இஸ்லாமியர்கள், தலித்துகள் தாக்கப்படுவதற்கு சங் பரிவார அமைப்புகளே காரணம்" என்று, மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்லாமியர்கள், தலித்துகள் தாக்குதல் குறித்து ஒவைசி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க மறுத்துவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் நிற்க போவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் மட்டும் தாக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சங் பரிவார் அமைப்புகள்தான் காரணம்" என்றார்.
இவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்க சென்றபோது பாஜக மக்களவை உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என முழக்கமிட்ட சம்பவம், மக்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.