தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உங்க நண்பருக்கு எப்போ வரவேற்பு: மோடியை விமர்சித்த ப.சிதம்பரம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

டெல்லி: உலகரங்கில் இந்தியாவை கடுமையாக சாடிவரும் தனது நண்பரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்துவார என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

உங்க நண்பருக்கு எப்போ வரவேற்பு தரபேறீங்க! மோடியை விமர்சித்த ப.சிதம்பரம்
உங்க நண்பருக்கு எப்போ வரவேற்பு தரபேறீங்க! மோடியை விமர்சித்த ப.சிதம்பரம்

By

Published : Oct 1, 2020, 10:42 AM IST

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நெருங்கிவரும் சூழலில், செப்டம்பர் 30ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு விவாத நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப் பங்கேற்றார். அதில், உரையாற்றிய அவர், கரோனாவால் உயிரிழந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மறைப்பதாகவும், அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

அதில், "கரோனாவால் உயிரிழந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மறைப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். தனது உற்ற நண்பரை கௌரவிக்க இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்துவாரா பிரதமர் மோடி?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், "47 ஆண்டுகளில் பிறர் செய்ததை வட 47 மாதங்களில் நான் அதிகமாக செய்துள்ளேன்" என்று டொனால்ட் டிரம்ப் அதிபர் விவாதத்தில் கூறியதாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம். இந்த தகவல் இந்தியாவில் உள்ள ஒருவரை உங்களுக்கு நினைவூட்டினால், அது உங்கள் கற்பனை! என்று பிரதமர் மோடியை மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details