தமிழ்நாடு

tamil nadu

INX Media Case - உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு

By

Published : Nov 18, 2019, 1:01 PM IST

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப. சிதம்பரத்தின் விசாரணை முடிந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனால், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கின் காரணமாக ப. சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என இன்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.

இதனையும் பார்க்க : இதுதான் தகவல் அறியும் உரிமை சட்டமா? பா.ஜனதாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details