கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.
பதஞ்சலியின் புதிய மருந்து குறித்த விவரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது - ஆயுஷ் அமைச்சகம் - ஆயுஷ் அமைச்சகம்
டெல்லி: பதஞ்சலி நிறுவனம் தங்கள் புதிய மருந்து குறித்த அறிக்கையை ஆயுஷ் அமைச்சகத்தில் சமர்பித்துள்ளது.
இதனிடையே, பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை கோவிட்-19 நோயாளியை ஏழு நாள்களில் குணப்படுத்த முடியும் என்று கூறி ஒரு மருந்தை வெளியிட்டது. இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்ட இந்த மருந்து குறித்த விளம்பரங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது.
இந்நிலையில், மருந்து குறித்த விவரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் ஆராயப்பட்டு அனுமதி குறித்த முடிவு இறுதியாக எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாபா ராம்தேவ் புதிய மருந்தை தயாரித்துள்ளார். அங்கீகாரம் குறித்த முடிவு இறுதியாக எடுக்கப்படும்" என்றார்.