தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திடீரென எரிந்த தனியார் பேருந்து: நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த பயணிகள் - ஹைதராபாத்தில் திடீரென எரிந்த தனியார் பேருந்து

ஹைதராபாத்: ஆர்சி புரன் பகுதியில் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது. ஆனால் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டுநர் உள்பட 26 பயணிகள் உயிர் பிழைத்தனர்.

passengers-escape-after-bus-catches-fire-in-hyderabad
passengers-escape-after-bus-catches-fire-in-hyderabad

By

Published : Mar 13, 2020, 12:56 PM IST

மும்பையில் இருந்து ஹைதராபாத்தின் ஆர்சி புரன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது.

ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் பேருந்தில் இருந்த 26 பயணிகள் உள்பட பேருந்து ஓட்டுநரும், உதவியாளரும் தப்பித்தனர். பேருந்தின் இன்ஜினில் மின்னழுத்தம் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாதத் தெரிகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த தீயணைப்பு படையினர் நெருப்பை அணைத்தனர். இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ பற்றி எரிந்த தனியார் பேருந்து

இதையும் படிங்க... கப்பல் - விசைப்படகு மோதி விபத்து; உயிர் தப்பிய ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details