தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராஜதானி விரைவு ரயிலில் 5 வெடிகுண்டுகள்' - ட்வீட் செய்த பயணியால் ரயில் நிறுத்தம் - ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

டெல்லி: ராஜதானி விரைவு ரயிலில் ஐந்து வெடிகுண்டுகள் உள்ளதாக பயணி ஒருவர் ட்வீட் செய்து, ரயில்வே காவல் துறையை டேக் செய்ததால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி-திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
டெல்லி-திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

By

Published : Feb 28, 2020, 10:19 PM IST

டெல்லியிலிருந்து கான்பூர் சென்ட்ரல் வரை செல்லும் டெல்லி-திப்ருகார் ராஜதானி விரைவு ரயிலில் ஐந்து வெடிகுண்டுகள் இருப்பதாகச் சஞ்சீவ் சிங் குர்ஜார் என்ற பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதுமட்டுமல்லாமல் அவர், @RailMinIndia, @PiyushGoyal, elDelhiPolice, @IRCTCofficial ஆகிய ட்விட்டர் பக்கங்களை டேக் செய்துள்ளார்.

அதனைக் கண்ட ஆக்ரா ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர், ராஜ்தானி விரைவு ரயிலை தாத்ரியில் நிறுத்தி சோதனையிட ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தாத்ரியில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனைசெய்யப்பட்டது. ராஜதானி விரைவு ரயில் டெல்லியிலிருந்து மாலை 4.10 மணிக்கு பயணத்தைத் தொடங்கி காலை 7.00 மணிக்கு கான்பூர் அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெல்லி கலவரத்தில் உயிரிழந்த காவலர்களுக்காக மொட்டையடித்து இந்து முன்னணி அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details