தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவா மாநில முதல்-முதலமைச்சர் குறித்து கடைசியாக ட்வீட் செய்த பாரிக்கர் - Manohar parrikar

பனாஜி: கோவைவின் மறைந்த முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கடைசியாக கோவா மாநில முதல்-முதலமைச்சர் தயானந்த் பண்டோட்கர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

பாரிக்கர் டிவிட்டர்

By

Published : Mar 18, 2019, 8:37 AM IST

கடந்த ஓராண்டாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கா் (63) நேற்று காலமானார்.

அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

முதலமைச்சர் மறைவையொட்டி இன்று நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் தலைநகர்,மாநிலங்களின் தலைநகர்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மறைந்த பாரிக்கர், கடைசியாக மார்ச் 11ஆம் தேதியன்று கோவா மாநிலத்தின் முதல்-முதலமைச்சர் குறித்து ட்வீட் செய்திருந்தார்.

அதில், "இன்று கோவாவின் முதல்-முதலமைச்சர் தயானந்த் பண்டோட்கரின் பிறந்த நாள் விழா. கோவாவின் முன்னேற்றத்திற்கு வலுவாக அடித்தளமிட்ட அவரது அளவற்ற பங்களிப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details