உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் விரைவில் கூட்டப்படும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் விரைவில் கூட்டப்படும் - ஓம் பிர்லா - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
ஓம் பிர்லா
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலத்துவது குறித்த வழிகாட்டுதலை அரசு வெளியிடும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் விரைவில் கூட்டப்படும். அது குறித்த முடிவை அரசே எடுக்கும். முன்பு நடைபெற்றது போலவே, நாடாளுமன்ற கூட்டம் இயல்பாகவும் முழுவதுமாகவும் நடைபெறும். அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும்" என்றார்.