நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவார் மூன்று முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்தார். நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க வெளிப்படையான சட்டவழிகளை மேற்கொள்ளவே இந்த மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மூன்று தொழிலாளர் மசோதாக்கள்:
- தொழிலாளர்களின் தங்குமிட பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, அவர்களின் பணியிட சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மசோதா
- நாட்டில் உள்ள 40 கோடி அமைப்பு சார தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதா
- வர்த்தக சங்கங்கள், தொழிற்சாலைகள் சார்ந்த பல்வேறு சட்டங்களை தொகுக்கப்பட்டு 29 சட்டங்கள் நான்காக இணைக்கப்பட்டுள்ளது