பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பு, ஜனவரி 29ஆம் தேதி பட்ஜெட் குறித்து குடியரசு தலைவர் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அதனை, காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்! - பட்ஜெட்
டெல்லி: பட்ஜெட் நாளன்று நடைபெறவுள்ள குடியரசு தலைவர் உரையை காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன.
நாடாளுமன்றம்
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தலைவர் உரையை 16 கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன. வேளாண் சட்டங்களை வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சிகளின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.
பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.