தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டரை ஆண்டுகள் போராடி 11 ரூபாயைப் பெற்ற முதியவர்! - பானிபட் தபால் நிலையம் பணவிடை

சண்டிகர்: பானிபட் அஞ்சலகம் செய்த தவறை ஒப்புக்கொண்டு, இரண்டரை ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட முதியவருக்கு 11 ரூபாயை வழங்கியுள்ளது.

சண்டிகர்
சண்டிகர்

By

Published : Jan 9, 2021, 5:12 PM IST

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அஞ்சலகத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வர்மா (56) என்பவர், பணவிடை அனுப்பச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு வெவ்வேறு எண்கள் அடங்கிய இரண்டு ரசீதுகளை அஞ்சலக ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.

குழப்பமடைந்த வர்மா, இது குறித்து ஊழியர்களிடம் விசாரிக்கையில், அவர்கள் பதிலளிக்க மறுத்து அலட்சியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து வர்மா பானிபட், அம்பாலாவில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் புகாரளித்தது மட்டுமின்றி இறுதியாக டெல்லியின் மத்திய தகவல் ஆணையத்தை அடைந்தார்.

பிரச்சினையை அறிந்துகொண்ட அஞ்சலகம், அவருக்குச் சேர வேண்டிய 11 ரூபாயை வழங்கியது மட்டுமின்றி மன்னிப்பும் கோரியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details