தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதியா? நடந்தது என்ன... - Passenger Claims Terrorist Onboard Delhi-Goa Flight

டெல்லி: டெல்லியிலிருந்து கோவா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதி இருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்ததால், சக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம்
விமானம்

By

Published : Oct 23, 2020, 11:37 AM IST

டெல்லியிலிருந்து கோவாவுக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதிலிருந்து பயணி ஒருவர், தான் ஒரு சிறப்பு பிரிவு காவல் அலுவலர் எனவும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சக பயணிகளை இது அச்சமூட்டியது.

பின்னர், தபோலிம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவரின் பெயர் சியா உல் அக் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விமான நிலைய காவல் துறையினர் சியா உல் அக்கை மத்திய தொழிற் படையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அந்த குறிப்பிட்ட பயணி சிகிச்சை பெற்றுவந்தது விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், பனாஜியில் உள்ள மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டுவந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வடகிழக்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details