2019ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி சண்டிகர் மாநிலம் பஞ்ச்குலா என்னும் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் அருகே காலியாக உள்ள நிலத்தில் ஐந்து வயது சிறுமியை, 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் செங்கலால் அடித்துக் கொடூரமாகக் கொலைசெய்தார்.
5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: சிறுவனுக்கு ஆயுள்
சண்டிகர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொலை செய்த சிறுவனுக்கு பஞ்ச்குலா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன்தான் இந்தக் கொலையை செய்தார் என்று ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றம் உறுதிசெய்து, அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நேற்று (ஜன.24) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நரேந்திர சூரா தீர்ப்பளித்தார். குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், குற்றவாளியின் வயது 18க்கும் குறைவாக உள்ளதால், அவர் காப்பகத்தின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், 21 வயதை எட்டியவுடன் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.