புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள திருவாசல்திடல் கிராமத்தில், வேளாண் பண்ணை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குளம் வெட்டினர். அப்போது பூமிக்கு அடியிலிருந்து திடீரென ஒருவிதமான ஒலி சத்தம் எழும்பியது.
இதையடுத்து குளம் வெட்டுவதை நிறுத்திய தொழிலாளர்கள் சத்தம் வந்த பகுதியில் ஆழமாக கைகளால் தோண்டினர். அப்போது பூமிக்கு அடியில் இரண்டடி உயரமுள்ள இரண்டு சாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலைகளை வெளியே எடுத்து பார்த்தபோது அது பழங்காலத்து வரதராஜ பெருமாள், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலைகள் எனத் தெரியவந்தது.