தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

34 ஆண்டுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண் - 34 ஆண்டுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை பெற்ற பெண்

லக்னோ: உத்தர பிரசேத மாநிலத்தில் வசிக்கும் பெண்ணுக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது

Pakistani woman

By

Published : Oct 6, 2019, 11:48 PM IST

latest national news - பாகிஸ்தானின் ஹைதராபாத் பகுதியில் 1960ஆம் ஆண்டு பிறந்த ஜூபேதா பேகம், இந்தியாவின் முசாபர் நகரில் உள்ள யோகேண்ட்பூர் பகுதியில் வசிக்கும் சையத் முகமது ஜாவேத் என்பவரை 1985இல் மணந்துகொண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது முதல் அவர் நீண்டகால விசாவில்தான் இந்தியாவில் தங்கியுள்ளார். பலமுறை இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 34 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவேத்தை திருமணம் செய்துகொண்டேன். நான் லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள பல அரசாங்க அலுவலகங்களுக்குக் குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கான குடியுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

உள்ளூர் புலனாய்வு பிரிவு (எல்.ஐ.யூ) ஆய்வாளர் நரேஷ் குமார் கூறுகையில், "அவர் 1985 இல் திருமணம் செய்துகொண்டு 1994 இல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். நீண்டகால விசாவில் 7 ஆண்டுகள் தங்கிய பின், அவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். அது பரிசீலனை செய்யப்பட்டுக் கடந்த வாரம் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது" என்றார்.

ஜூபேதா பேகத்துக்கு ருமேஷா மற்றும் ஜுமேஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மெட்ரோவுக்காக மரங்கள் வெட்டப்படும் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details