ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிக்கும் ரோஷாண்டின் என்பவர், இந்திய எல்லைப் பகுதி மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் நாட்டிற்கு அனுப்புவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அந்நபரை ராஜஸ்தான் ஏடிஎஸ், உளவுத்துறை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்துவந்தன.
இது குறித்து சிறப்பு சிஐடி நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு வாட்ஸ்அப் மூலம் ரோஷாண்டின் தகவல் அனுப்பியது உறுதிசெய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவரின் செல்போனை பறிமுதல்செய்து ஆய்வுசெய்ததில், ஐஎஸ்ஐ அமைப்புடன் நடந்த உரையாடல் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.